
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ். ஈச்சமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்பிரட் ஜேசுதாசன்(ரஞ்சன்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
நாம் மகிழ்ச்சியாக இருக்க
நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய்
இருந்துகொண்டே இருக்கும்...
நித்திய பிதாவே!
உமது திருவுளப்படி
வாழ்ந்து
உம் அண்டை
வந்துள்ள
உமது அடியார்
அன்ரன் ஜேக்கப் ஜேசுதாசன் அவரின்
ஆன்மாவை உமது நித்திய
வான் வீட்டில் சேர்ந்தருள
வேண்டுமென்று
இரந்து மன்றாடுகின்றோம்
ஆமென் !!
தொடர்புகளுக்கு
- Mobile : +94774003334
Our deepest condolences to your family and loved ones. Nesan and Suja