1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்பேட் அன்றூ ஜோர்ச் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்-அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!
தகவல்:
குடும்பத்தினர்
We are so sorry for your loss. Please accept our deepest condolences for your loss.