4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அழகம்மா கணபதி
வயது 88
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், பலாலி தெற்கு வயாவிளான் வரபுலத்தை வாழ்விடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அழகம்மா கணபதி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா
அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து
நான்கு ஆண்டுகள் ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய்
என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?
கனவுகளை நாங்கள் சுமந்து|
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினோம்
கண்கள் இல்லாமல் ரசித்தோம்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தோம்
உங்கள் கருவறையில் மட்டும் அல்ல
உங்கள் அரவணைப்பிலும் தானம்மா!!
தகவல்:
ராஜேந்திரம்-மகன்