யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் 2ம் பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட ஐயன் சோதிராசா அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயன் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், வேலன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், பசுபதி, தர்மேஸ்வரன் மற்றும் அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியகுமார், பிரதிஸ்குமார்(ஜேர்மனி), சசிக்குமார், தினேஸ்குமார், ஜெயக்குமார், விஜிதகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலினி, கலையரசி, சுவேந்திரா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷன், சரணிகா, சம்சிகா, கீர்த்தி, தனு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.??