10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்
கனடா வாட்டலு பல்கலைக்கழக மாணவி
வயது 19
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிநயா சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றோம்
விரைந்தோடி வருவீர்களோ!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும்
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்
உம் ஆன்ம சாந்திக்காய் தினமும்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்!!!!
தகவல்:
சண் மாஸ்ரர்