10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:15/08/2026
கனடாவைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அபினன் சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உந்தன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
உன் பிரிவால் வாடித்துடிக்கும்
குடும்பத்தினர்...!
தகவல்:
அப்பா, அம்மா, அக்கா, தங்கை