15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் வல்லிபுரநாதர்
சம்பந்தர், இளைப்பாறிய ஆசிரியர், சாஸ்திரியார்
வயது 94
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் வல்லிபுரநாதர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினைந்து ஆண்டுகள் நீண்டு
நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும்
உடைந்து தான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் பதினைந்து வந்திட்ட
போதினிலும்
நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும்
மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும்
மனைவி, பிள்ளைகள்..!
தகவல்:
குடும்பத்தினர்