

ஆறுமுகம் தையல்நாயகி:-
யாழ். அரியாலை 21, கனகரட்ணம் தெருவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தையல்நாயகி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா பதின்னைந்து ஆண்டுகள்
கரைந்ததம்மா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா! எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...
கந்தையா ஆறுமுகம்(பிறப்பு- 10:11:1910 - இறப்பு 11:04:1999):-
(அரியலை முருகன் விமானம்(லொறி)- உரிமையாளர்)
யாழ். அரியாலை 21, கனகரட்ணம் தெருவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அய்யா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
உங்கள் நினைவால் வாடும்
குகதாஸ், குகராணி, கமலதாஸ், கமலராணி,
பாலேந்திரதாஸ், குகேந்திரதாஸ், பாலேந்திரராணி
ஆனதோ ஆண்டுகள் பதின்நான்கு. நினைவளியா நாட்கள் எத்தனையோ.