Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1926
இறப்பு 19 DEC 2020
அமரர் ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர், சோமஸ்கந்தா கல்லூரி- புத்தூர்
வயது 94
அமரர் ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன் 1926 - 2020 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும், ஓமந்தையை தற்காலிகமாக வசிப்பிடமாகவும்  கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன் அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார், ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  செல்லத்துரை செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான பகீரதியின் அன்புக் கணவரும், 

ஈஸ்வரதாசன்(ஓய்வுபெற்ற பரிசோதகர், மந்திகை வைத்தியசாலை- அச்சுவேலி), ஞானேஸ்வரதாசன் (வவுனியா), மோகனதாஸ்(சுவிஸ்), செல்வரதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பூபாலசிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரரும்,   

அமுதா(விலங்குப் புலனாய்வு அதிகாரி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,

கைலாயபதி, பூபாலசுந்தரம், ஸ்ரீராமகிருஷ்ணர், மலர், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்றவர்களான  சச்சிதானந்தன், பராசக்தி,  ஆகியோரின் சித்தப்பாவும், 

செல்வராணி(ஓய்வுபெற்ற ஆசிரியர், வ/விபுலானந்தாக் கல்லூரி வவுனியா-  யா/அச்சுவேலி சென்.தெரேசாள் மகளிர் கல்லூரி), சுதேசனா, புஸ்பா(சுவிஸ்), பகீரதன்(சுவிஸ்), பிரபாகரன்(கால்நடை வைத்தியர், சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா(ஓய்வுபெற்ற பிரதம எழுதுநர்),  பத்மாவதி,  சிவகணேசதாசன், தவமணி ஆகியோரின் மைத்துனரும்,

பகீரதன்(சிங்கப்பூர்), செளமிதா(ஆசிரியர்- விளாத்திகுளம் சிதம்பரம் வித்தியாலயம், ஓமந்தை), திவாகரன் (கொழும்பு), கம்சிதா, சயந்தனா, சபாந்தினி, அனுஜன்(சுவிஸ்), சிந்துஜன்(சுவிஸ்), கமன்ஜா(சுவிஸ்), பகீசன் (சுவிஸ்), சஞ்சீவன்(தாதி உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை), குருபரன், லக் ஷன், லாசினி, பிரகீஷன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 21.12.2020 திங்கட்கிழமை ஓமந்தை அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices