உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பலாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 1ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆரோக்கியநாதர் மரியநாயகி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்ப விளக்காக நின்று எம்மை தவிக்கவிட்டு இன்றோடு ஆண்டு பத்து கடந்தாலும், என்றும் நீங்காத நினைவுகளுடன் எம் நெஞ்சில் நீங்கள் என்றும் நீங்காத சுடராய் வாழ்கின்றீர்கள்!
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை இன்று கண்ணீர் மல்க விட்டு சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும் எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!