இந்தியா திருச்சி திண்ணணூர் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பம்பலப்பிட்டி தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட ஆண்டியாபிள்ளை துரைசாமி அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆண்டியாபிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை, அரவாயி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தினோஷாந்(Emar Pharma), ஷாலினி, தீபக்ஷாந்(Jetwing Beach) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்துரு, அபிலாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகப்பிள்ளை(Pacific Metals), செல்லம்மாள், தங்கேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நடேசன், சண்முகம், கணேசன், சந்திரசேகரன் ஆகியோரின் பாசமிகு மாப்பிள்ளையும்,
பலகொல்ல சுந்தரமூர்த்தி, விஜயா(கண்டி), லேட் நடராஜா, கமலா ஆகியோரின் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான அரவாண்டியாபிள்ளை, அருணாசலம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடேசன் மற்றும் சுப்ரமணியம், முரளி ஆகியோரின் அன்பு சகலையும்,
விஷாத்திகா, கிருத்விஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சுஷ்வந்த் அவர்களின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-10-2019 திங்கட்கிழமை அன்று 03:00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.