
மன்னார் பன்னைவெட்டுவானை பிறப்பிடமாகவும், அடம்பன் பாலைக்குழி சகாயவவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் ஆனாள்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உற்றவேளையில் எமக்கு பலவழிகளிலும் உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி நவிலல்:
எமது பாசமிகு அன்னையை இழந்து நாம் துயருற்ற வேளை நேரில் வந்து
உடனிருந்த உறவுகள், நண்பர்கள், தொலைபேசி வழியாக
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தங்கள் அனுதாபங்கள் தெரிவித்த உறவுகள், எமது அம்மாவின் இறுதி யாத்திரைச் சடங்கில் கலந்து அவருக்கு
மரியாதை அஞ்சலி செலுத்தி அவருக்காக செபித்த அனைவருக்கும் அத்துடன்
மிகவும் சிறப்பாக அனைத்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கெளரவ வடமாகாண உறுப்பினர்கள், கெளரவ வடமாகாண பிரதம செயலாளர், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், காவல்துறை அதிகாரி, காவல்துறையினர், மிகவும் மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர்கள், உறவுகள், எமக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்த அன்பு உள்ளங்களை அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகின்றோம்.