Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUL 1947
மறைவு 31 JUL 2024
அமரர் சந்திரமதி பாலசுப்பிரமணியம் (ரீச்சர் அன்ரி)
ஓய்வுபெற்ற ஆசிரியர் யாழ் / இந்து மகளீர் கல்லூரி
வயது 77
அமரர் சந்திரமதி பாலசுப்பிரமணியம் 1947 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் சிற்றம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திரு.இ.மா.பாலசுப்பிரமணியம் (முன்னாள் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,

பாலகஸ்தூரி, இளங்கீரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நமசிவாயத்தின் அன்பு மாமியாரும்,

பிரமோதன், நயனி, பிரணீத் ஆகியோரின் செல்ல அம்மமமாவும்,

காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, Dr.இராசலிங்கம், சிவலிங்கம் மற்றும் மகாலெட்சுமி, காலஞ்சென்றவர்களான ஆனந்தலெட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, நவநீதராஜன் மற்றும் அருள்கந்தராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைமகள், காலஞ்சென்ற இ.மா.சிவசுப்பிரமணியம் மற்றும் கைலாசபதி, காலஞ்சென்ற நாமகள், சண்முகலிங்கம், Dr.ஸ்ரீகாந்தா மற்றும் Dr.மைத்திரி, மரகதவல்லி, இந்திராணி,சோமவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 01.08.2024 வியாழக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து பி.ப 6.00 மணி வரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 02.08.2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் பி.ப 3.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைக்காக பொரளை இந்து மயானத்திற்குஎடுத்துச்செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

வீட்டுமுகவரி
37/1,1/3
ஹம்டன் வீதி,
வெள்ளவத்தை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம் - கணவர்
பாலகஸ்தூரி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices