யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், ஜெர்மனி Osterode ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு திரேசா செல்லம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயின் அன்பு உயிரைத் தாலாட்டும்
தாயின் அன்பு வாழ்வைத் தாங்கி நிற்கும்
விழுந்து எழுந்த ஒவ்வொரு தருணத்திலும்
வார்த்தைகள் இல்லாமல் துணை நின்றவள் நீ
தோளிலும் உனது மடியிலும் சுமந்த நாட்கள்
மறைந்தாலும் தோளாக நின்ற உன் அன்பு
மறைவதில்லை
கடினமான முகத்தின் பின்னால் கடலைவிட
ஆழமான பாசம் மறைந்திருக்கிறது
எங்கள் வெற்றியில் சிரிப்பவள் நீ
எங்கள் தோல்வியில் தைரியம் கொடுப்பவள் நீ
உலகம் முழுவதும் எங்களை விட்டு விலகினாலும்
எங்கள் கைகளை விடாமல் பிடித்திருப்பவள்
எங்கள் தாய்
தாயின் அரவணைப்பு என்பது வார்த்தைகளால்
சொல்ல முடியாத, வாழ்நாள் முழுவதும் நம்மை
காக்கும் நிழல்
தேகம் வேறு ஆகலாம் தெய்வம் ஒன்று
தான் அம்மா
அன்பு கொண்டு பாடும்
உங்கள் பிள்ளைகள் தான் பார் அம்மா
கோவில் தேவையில்லையே நேரில் வந்த
கோவிலே,
இன்றும், என்றும், எப்பொழுதும்
எங்கள்
மனதில் வாழும் எங்கள் தேவியே
கூடு வாழும் குருவிகள் பாடு பாசப் பறவைகள்
வாழ்த்துவோம் உன்னை போற்றுவோம்,
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவோம்
காலம் காலம் யாவிலும்
நீ தான் அம்மா
எங்களுக்கு மறுபடி மறு
பிறவியிலும்
அம்மாவாக வர வேண்ட
வேண்டுகின்றோம்...