யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி பீற்றர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து மின்னலென மறைந்தாலும் எம்மை ஆளாக்கியவரது பிரிவுத்துயர் அணையாது என்றுமே.. எம் மனதில்
அதிகாலை சூரியனாய் ஒளிவீசி இருந்த நீங்கள் அர்த்தம் ஏதும் சொல்லாமல் அஸ்தமித்த ஏனப்பா???
மனித வாழ்வில் இனிமையான மென்மையான பொறுமையான சாந்தமான பாசமுள்ள அப்பாவை எமக்கு தந்த இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றோம்..
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும் நீங்கள் காட்டிய பாதையில் தான் பயணிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!