

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குகானந்தன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நாகேசு நாகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அகிலாண்டேஸ்வரி(மாலா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரவி சங்கர்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆட்ஜா(கனடா) அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற குகவதனா, குகரதி(ஆசிரியை- யா/சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன்(ஆசிரியர்- யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
நிஷாந்தி(அபி விருத்தி உத்தியோகத்தர் மாவட்டச் செயலகம் - யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற தனபாலன், சசிதரன், சந்திரகுமார், சடகோபன், பரமானந்தன், சோதிமலர், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷரா, அர்விந் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ?