5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர் - புனித அன்னாள் பெண்கள் மகா வித்தியாலயம் கொச்சிக்கடை, கொழும்பு - 13
வயது 94
அமரர் மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை
1926 -
2021
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உமை பார்ப்பது இனி எக்காலம்?
அம்மா… இன்று நீங்கள் எம்முடன் இருந்திருந்தால்
உங்கள் நூறாவது பிறந்தநாளை
எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்
கொண்டாடி மகிழ்ந்திருப்போம்…
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் அணையாத சுடராய்
என்றும் இருப்பீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
We are very sorry for the loss of your mother Pius and family. May her love and happy memories comfort you during this difficult time.