Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழினப் படுகொலையின் 15ம் ஆண்டு நினைவு நாள்
இறப்பு - 18 MAY 2009
தமிழினப் படுகொலையின் 15ம் ஆண்டு நினைவு நாள் 2009 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

இலங்கையின் ஆயுதப் படைகளினால் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்தும், காணாமல் ஆக்கப்பட்டதும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த துயரமிகு உண்மைச் சம்பவமாகும்.

தமிழினப் படுகொலையின் 14ம் ஆண்டு நினைவு நாளான 18-05-2023 இன்று, தமிழ் பேசும் மக்கள் துயரத்தின் நினைவில் மூழ்கியுள்ளனர்.

இவ்வாறு இந் நாளில் படுகொலை செய்யப்பட்டவர்களான நம் உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது ஐ.பி.சி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் துயரிலும் கண்ணீர் சிந்தி பங்கெடுத்துக்கொள்கிறோம்.

உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே பகிருங்கள்

தீராத வலிகள்
...................

முள்ளிவாய்க்கால் வாழ்வு முடிவில்லா வலியே
பள்ளிக்கூடம் விடுத்து பதுங்குகுழியில் வாழ்ந்தோம்

 இன்பமாக வாழ்ந்த எம் தமிழ்மக்கள்
துன்ப வேதனையில் துவண்ட இடம்

காப்பாற்ற யாருமின்றி கதறி அழுது
பேச்சடங்கி வீழ்ந்து மாண்ட இடம்

அம்புலன்ஸ் சத்தமும் ஐயோ கதறலும்
சிதறிய உடல்களும் சிதைந்த அங்கமும்

 வெண் நிற மணல் மீது
செந் நிற குருதி பாய்ந்து
சிவப்பாக மாறியது செந்தமிழர் பூமி

முனகல் சத்தமும் முழுசா புதையா சடலமும்
முந்தானை சாறிக்குள் மூச்சற்ற குழந்தைகள்

உற்றாரை இழந்தோம் உடன்பிறந்தாரை இழந்தோம்
சுற்றாரைப் பிரிந்தோம் சுடுகுழலால் மாண்டோம்

புத்தனின் பிள்ளைகளின் பித்துப்பிடித்த செயலால்
சித்தனின் பிள்ளைகள் சிதறி வீழ்ந்தனர்

நல்லினம் ஒன்று நற்தலைமையை இழந்து
நாதியற்று நடைப்பிணமாய் நலிவுற்று தவிக்க

ஐவிரண்டு ஆண்டில் எதிரிக்கு நல்லவனானோம்
மறப்போம் மன்னிப்போம் எனக் கூவல்......

எவன் மறப்பான் எதை மன்னிப்பது
எல்லாம் மனதில் எண்ணிலடங்கா பொக்கிஷமாய் பதிந்தன.  

தகவல்: RIPBOOK